Tuesday, December 02, 2008

478. வல்லரசு என்றொரு கனவு- கி அ அ அனானி - பகுதி 2

வாசித்து விட்டுத் தொடரவும்:
வல்லரசு என்றொரு கனவு- கி அ அ அனானி

நமது கையாலாகாத்தனத்தில் உழன்று கொண்டிருக்கும் இந்த வேளையில், இது போல் மேலும் மேலும் நம் மேல் தீவிரவாதங்கள் நிகழ்த்தப்படும் என்பதையும் ஏற்றுக் கொள்வோம். இதுதான் நம்மைப் போன்ற ஒரு மூன்றாம் உலக நாட்டின் மூன்றாந்தரமாக நடத்தப்படும் குடிமகனின் நிலையாக இருக்கும். நாம் இதைப் பற்றி செய்யக் கூடியதெல்லாம் திட்டி நாலு வார்த்தை பேசுவதும், எழுதுவதும் அதுவும் சுய பச்சாதாபத்தினாலும் அரசாங்கத்தின் மேல் ஏற்படும் வெறுப்பினாலும். இன்றைய மிதமிஞ்சிய வேதனை உணர்ச்சிகளும் கோபங்களும் படிப்படியாய் மறைந்து போகும்.

இன்னும் சிலவாரங்களில் நமது வழமையான எண்ணங்களிலும், வேலைகளிலும், டிவி சீரியல்களிலும் மூழ்கி விடுவோம். இதையும் இந்தியா எதையும் தாங்கும், மறக்கும், மன்னிக்கும் இறையாண்மையுடைய நாடு என்று சிலர் பெருமை பேசக் கூடும். நாம் இன்னும் ஒரு முறை சில தீவிரவாதிகளால் வன்புணரப்பட்டதால் வழியும் ரத்தத்தை துடைத்துக் கொண்டு இன்னும் ஒரு முறை வேறு சில தீவிரவாதிகளால் வண்புணரப்பட தயாராகி விடுவோம்.

ஏனென்றால் நமக்குக் கிடைத்ததெல்லாம் போலி மதச்சார்பின்மை பேசித்திரியும் மாக்களும், மந்திரிகளும், அரசியல்வியாதிகளும் தான். தீவிரவாதத்தினால் எத்தனை மனிதர் மடிந்தாலும் அதைப் பற்றியெல்லாம் கவலைப்படாமல், அக்கரை காட்டாமல் அந்த நிகழ்வின் மூலம் ஓட்டுகளை பொறுக்க எப்படியெல்லாம் நாடகமாடலாம் என சதா சர்வகாலமும் சிந்திக்கும் கபடம் நிறைந்த அரசியல்வாதிகள் இருக்கும் வரை நமக்கு உய்வு என்பது கிடையாது. தீவிரவாதம் கொஞ்சம் கொஞ்சமாய் வளர்ந்து பாராளுமன்றத்தையே தாக்கும் வரை வந்த பின்னும்.. அது நடந்து 7 ஆண்டுகள் ஆகியும்.. அந்தோ பரிதாபம்..அதிலும் செத்தது மந்திரியோ, எம்பியோ அல்லாமல் சாதாரணக் காவலர் தான் என்பதால் அதுவும் அரசியல் நாடகத்தில் ஒரு அங்கமாய் மாறிப்போனது.

இங்கே பாபாசாஹேப் அம்பேத்கர் சொன்னதை நினைவு கூர்வது அவசியமாகிறது.

APPEASEMENT means buying off the Aggressor by conniving at his acts of murder, rape, arson and loot against INNOCENT persons who happen to be the victims of his displeasure... the policy of concession has increased Muslim aggressiveness, and what is worse, Muslims interpret these concessions as a sign of DEFEATISM on the part of the Hindus and the ABSENCE of the Will to resist.

This policy of appeasement will involve the Hindus in the same fearful situation in which the Allies found themselves as a result of the policy of appeasement which they adopted towards HITLER. This is another Malaise, no less acute than the malaise of SOCIAL STAGNATION. Appeasement will surely aggravate it

அவர் அன்று கூறியது பல ஆண்டுகளுக்குப் பின்னும், இன்றும் பொருந்தி வருகிறது.

தீவிரவாதத்தினால் சாகும் ஆயிரமாயிரம் அப்பாவிகளுக்காய் கவலைப் படாமல், தீவிரவாதியின் சிறுபான்மை இனம் நோகுமென்றும், தீவிரவாதியின் மனித உரிமைக்குப் பாதுகாவலர்களாகவும் கொடி தூக்கிக் கொண்டு கிளம்பி விடுவார்கள் நமது மனித உரிமைக் காவலர்கள். தீவிரவாதமே தேச விடுதலைப் போராய் திரிக்கப்படும் அவலமும் இதில் அடங்கும். தீவிரவாதிகளைக் கூட மன்னிக்கலாம், மதத்தின் பெயரால் தவறாக போதிக்கப்பட்டதால், மூளைச்சலவை செய்யப்பட்டதால், உச்சக்கட்ட வெறுப்பில் மனம் பேதலித்ததில் தீவிரமான குற்றத்தை புரிபவர்கள் அவ்விளைஞர்கள் என்று சில சமயங்களில் எண்ண முடியும்.

ஆனால், அவர்களை இந்த நிலைக்குத் தள்ளிய தீவிர மதவாதிகளும், தேசியத்தின் மேல் நம்பிக்கை அற்ற போலி செக்யூலரிஸ்ட்களும் தான் தீவிரவாதிகளை விட ஆபத்தானவர்கள். தீவிரவாதத்தால் செத்தொழிந்த சாதாரண மனிதருக்காய் ஒரு சொட்டுக் கண்ணீர் விடுவதை விட, கொன்ற தீவிரவாதியின் மனித உரிமைக்காக ஓங்கிக் குரல் கொடுத்து, தனது அறிவுசீவித் தனிப்புத்தியை நிறுவிக் கொள்வதாய் சுயவிளம்பரத்திற்காக ஃப்ளாகிலும், பேப்பரிலும், டிவியிலுமாக பிதற்றிக் கொண்டு திரியும் கூட்டத்தைப் பற்றி என்ன சொல்வது ? :-(

தீவிரவாதத்திற்கு எதிரான நமது போராட்டத்திற்கு தொடக்கமாக மத்திய அரசு

1. இந்தியா முன்வைத்த சிலபல நிபந்தனைகளை நிறைவேற்றும் வரை பாகிஸ்தானுடன் எல்லாவகையான உறவையும் முறித்துக் கொள்ளலாம். இப்போது இருப்பதை விட பெரிய கேடு ஒன்றும் நேரப் போவதில்லை.

2. நில, கடல் எல்லைப் பாதுகாப்பை 3 மடங்கு தீவிரமாக்கலாம். தீவிரவாத ஒழிப்புக்கென்று ஒரு அமைச்சகதை உருவாக்கலாம். ஒவ்வொரு மாநிலத்திலும், அதற்கென்று ஒரு துறை அமைப்பதுடன், பிரத்யேகமாக தனிப்படை ஒன்றை நிறுவலாம். அனைத்து அரசியல்வாதிகளின் NSG பாதுகாப்பை பாதியாகக் குறைத்து, இந்த தனிப்படைக்கு அந்த NSG வீரர்களை இட்டு வரலாம்!


மேற்கூறிய இரண்டு விசயங்களைக் கூட செய்யத் துப்பில்லை என்றால், நாம் வளர்ந்த நாடாவது, வல்லரசுக் கனவாவது, மண்ணாங்கட்டியாவது!!!! சர்தான்...போடாங்....

By கி அ அ அனானி

16 மறுமொழிகள்:

enRenRum-anbudan.BALA said...

test !

சுழியம் said...

Very good writeup. Please continue.

பிச்சைப்பாத்திரம் said...

//சர்தான்...போடாங்....//

ம்......... ஒரு முடிவோடதான் இருக்கீங்க போலிருக்கு. நடக்கட்டும். :-)

ஓகை said...

நீங்கள் சொன்ன இரண்டு யோசனைகளுடன் பலதிறப்பட்ட பல்நோக்குடைய பலமட்டங்களைக் கொண்ட உளவுத் துறைகளை அமைப்பதையும் சேர்த்துக் கொள்ளலாம்.

ஓகை said...

எப்போதெல்லாம் தீவிரவாதத் தாக்குதல் நடக்கிறதோ அப்போதெல்லாம் நாம் ஒரே மாதிரியான விளக்கங்களும் செயல்பாடுகளையும் கொண்ட அரசியல்வாதிகளையே பார்க்கிறோம். ஒரு செயலற்ற முடியாத உள்துறை அமைச்சரை நீக்கிவிட்டு அவ்விடத்துக்கு பொருத்தமான ஒரு நபர் கூட இல்லாத கட்சியை நாம் மத்தியில் வைத்துக் கொண்டிருக்கிறோம். சிதம்பரத்தின் முந்நாளைய மற்றும் இந்நாளைய செயல்பாடுகளை வைத்துப் பார்த்தால் அவரால் உள்துறையில் என்ன செய்ய முடியும் என்று தோன்றவில்லை. ஆனால் யோசித்துப் பார்த்தால் அக்கட்சியில் வேறு ஆட்களே இல்லை போலிருக்கிறது. இப்படி ஆட்களே இல்லாத கட்சிகளைத் தேர்தெடுப்பதை நிறுத்தினால் ஏதாவது நடக்குமென்று எதிர்பார்க்கலாம்.

said...

இந்த அட்டாக் ஒரு டெஸ்டிங் த வாட்டர் தான். இந்திய தற்காப்பு எந்த அளவில் இருக்கிறது எத்தனை கமாண்டோக்கள் இருக்கிறார்கள் அவர்கள் எவ்வளவு விரைவாக வர முடியும் எப்படி வர முடியும் என்பதையெல்லாம் சோதித்து அறியும் ஒரு லாபரட்டரியாக மும்பை இன்று பயன் படுத்தப் பட்டுள்ளது. உம்மா வைக் கொண்டு வர இது ஒரு முன்னோட்டம் மட்டுமே. நிஜமான தாக்குதல் இனிமேல்தான் வரவிருக்கிறது. இது ஒரு சின்ன சாம்ப்பிள் அவ்வளவுதான். உங்கள் அச்சங்கள் சரியானவையே. இந்தியா ராணுவ அளவிலும் சரி, மக்களின் மன உறுதியிலும் சரி. ஒற்றுமையிலும் சரி, உடல் வலுவிலும் சரி, தற்காப்பிலும் சரி மிக மிக பலவீனமான நிலையிலேயே இருக்கிறது.

குடித்துக் கும்மாளமிடும் வருங்காலப் பிரதமர் ராகுல்

தனக்குச் சேர வேண்டிய பங்கை மிரட்டி வாங்கி குடும்பத்தை கட்டுப் படுத்தும் கருணாநிதி

தன் பிள்ளையின் அடுத்த படத்திற்கு லொக்கேஷன் காண்பிக்கும் மும்பை முதல்மந்திரி விலாஸ்ராவ்தேஷ்முக்

தியாகியை நாய் என்று விளிக்கும் முதன் மந்திரி அச்சுதானந்தன்

இந்தத் தாக்குதலைக் கண்டித்தால் எங்கே தன் முஸ்லீம் ஓட்டு வங்கி பறி போய் விடுமோ என்று அஞ்சும் கருணாநிதி போன்ற மாநில கம்னியுஸ்டுகள் போன்ற தேசீய அரசியல்வாதிகள்

அப்படி தாக்குதல் நடத்த உள்ளே வந்தால் அவர்களுக்கு ஆதரவு கொடுக்கத் தயாராகக் காத்திருக்கும் இந்திய முஸ்லீம்களில் ஒரு பகுதியினர்

இந்தியாவின் மூலை முடுக்கெல்லாம் ஊடுருவியிருக்கும் பங்களா தேச முஸ்லீம்கள் அவர்களை உள்ளே கொண்டு வரும் கம்னியுஸ்டுகள்

தீவீரவாதியின் கைதுக்காகத் தூக்கம் இழக்கிறேன் என்று சொல்லும் பிரதம மந்திரி மன்மோகன் சிங்

பாராளுமன்றத்தைத் தாக்கியவனையே இன்னும் தூக்கில் போடத் தயங்கும் காங்கிரஸ் தலைமை மந்திரிசபை

இந்தியா தாக்கப் படும் பொழுது உல்லாச விடுமுறை அனுபவிக்கும் ஜனாதிபதி பிரதிபா

இன்னும் வேண்டுமா?

இதற்கு மேலும் இந்தியா இது வரை அழியாமல் இருப்பது உலக அதிசயமே. ஆனால் இந்த அதிசயம் இன்னும் அதிக நாட்கள் நீடிக்காது. இந்தியாவின் பேரழிவு இன்னும் அதிக தூரத்தில் இல்லை. இன்னும் சில வருடங்களில் நிகழ்ந்தே தீரும் என்று நினைத்திருந்தேன் ஆனால் நடப்பவையைப் பார்த்தால் இன்னும் சில மாதங்களிலேயே இந்தியாவின் முழு அழிவு நடந்து விடும் போலவே உள்ளது.

நம்மால் என்ன செய்ய முடியும்? என்ன செய்ய வேண்டும்?

அசோக் said...

Gud one, Please keep it up.......

astle123 said...

அருமையான கருத்துக்கள்!!

//தீவிர மதவாதிகளும், தேசியத்தின் மேல் நம்பிக்கை அற்ற போலி செக்யூலரிஸ்ட்களும் தான் தீவிரவாதிகளை விட ஆபத்தானவர்கள்.


இதுவே என்னுடைய கருத்தும்.

[உங்களுடைய பதிவை தமிழிஷில் வழங்கி உள்ளேன்.]
வாழ்த்துக்கள்!!

said...

Dear Bala
Send these postings to some news papers like dinamalar (Ithu ungal idam), so that it will reach many persons.

said...

சுழியம்

நன்றி

சுரேஷ் கண்ணன்
நம்ம நாடு முடிவோட செயல்பட்டிருந்தா இந்தப் பதிவெல்லாம் எழுதிப் புலம்ப வேண்டிய அவசியம் இருந்திருக்காதே
வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் நன்றி

கி அ அ அனானி

said...

ஓகை சார்

///யோசித்துப் பார்த்தால் அக்கட்சியில் வேறு ஆட்களே இல்லை போலிருக்கிறது. ///

தேடிப்புடிச்சு சிதம்பரத்தைப் போடுகிறார்கள் ,அவரும் எனக்கு இஷ்டமில்லாமல்தான் ஒத்துக்கொள்கிறேன் அப்படீன்னு சொல்லிட்டு பதவியை ஏத்துக்குறாரு.இதுதான் யதார்த்த நிலை :( வெட்கக்கேடு.

வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றி

கி அ அ அனானி

said...

அனானி
///இந்த அட்டாக் ஒரு டெஸ்டிங் த வாட்டர் தான்.///

ரொம்ப பயமுறுத்துரீங்க..ஆனா போகுற நெலமையைப் பாத்தா உண்மையாயிடுமுன்னும் தோணுது :(

கி அ அ அனானி

said...

அசோக்

வருகைக்கும் கருத்துப் பகிர்தலுக்கும் நன்றி.

கி அ அ அனானி

said...

நன்றி வீரன் வருகைக்கும் ,கருத்துக்களுக்கும்

தமிழச்சிக்கு பதில் சொல்லவேண்டும்தான்.ஆனால் இவ்வளவு சீரியசாகவெல்லாம் சொல்லக்கூடாது :)

கி அ அனானி

தருமி said...

நம்மூரில் சாதி வெறிகூட ஒருவேளை குறைய நேரலாம்; ஆனால் மதவெறி .. நம்பிக்கையில்லை. அதே போல நல்ல தலைமை கிடைக்கும் என்ற நம்பிக்கையுமில்லை. கையறு நிலைதான் என்றுமே!

said...

தருமி சார்

வருகைக்கும் கருத்துப் பதிந்தமைக்கும் நன்றி

கி அ அ அனானி

நன்றி நண்பரே !

வருகை தந்தமைக்கு நன்றி! உங்கள் மேலான கருத்துக்களை எதிர்பார்க்கிறேன்!
Related Posts with Thumbnails